ஓடிடியில் வெளியானது ‘புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன்’
Jan 30, 2025, 13:18 IST

புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2. இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத், சாம் சி எஸ் ஆகியோர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருந்தனர். நடிகை ஸ்ரீலீலா ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன்படி கிட்டத்தட்ட ரூ.1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.