விரைவில் புஷ்பா 2 படத்தின் டிரைலர்...!
Nov 5, 2024, 19:10 IST
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இதையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.