புஷ்பா 3 அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்...!
புஷ்பா 3 திரைப்படம் 2028 ஆம் ஆண்டு வெளியாகும் என தயாரிப்பாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் மற்றும் ஜகபதி பாபு நடித்த இந்தப் படம் இந்தப் படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.
இதனால் புஷ்பா 3 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், ராபின்ஹுட் படத்தின் புரமோஷன் நிகழ்வின் போது தயாரிப்பாளர் ரவிசங்கர், புஷ்பா 3 படம் 2028 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தங்கல் மற்றும் பாகுபலி 2 படங்களுக்குப் பிறகு, உலகளவில் ₹1,650 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா 2: தி ரூல் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் சுகுமார், ராம் சரணுடன் தனது தற்போதைய படத்தை முடித்த பிறகு புஷ்பா 3 படத்தின் பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.