×

மாடர்ன் லுக்கில் ராஷி கண்ணா... வைரலாகும் புகைப்படங்கள் !

 

மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ராஷி கண்ணா வெளியிட்டுள்ளார். 

தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என தற்போது இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக மாறியுள்ளார் ராஷி கண்ணா. ‘தோழி ப்ரேமா’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான அவர் அதையடுத்து ‘பெங்கால் டைகர்’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில்  அறிமுகமானார். பின்னர் அயோக்யா, அடங்கமறு, ‘சங்கத்தமிழன்’, அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ‘ஃபார்சி’ வெப் தொடரில் நடித்திருந்தார். 

இந்நிலையில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ராஷி கண்ணா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.