×

ராயன் ஓடிடி அப்டேட் - ரிலீஸ் எப்போ தெரியுமா?

 

தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியான படம் ராயன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இந்த படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இதில், தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களை விட ராயன் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த படம் வெளியான ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிகிறது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் ராயன் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ராயன் திரைப்படத்தன் ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படம் வருகிற 23 ஆம் தேதி அமோன் பிரைம் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.