×

ராயன் படத்தின் ப்ரீ புக்கிங் : அதிரடி வசூல்...!

 

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நடிகர் தனுஷ். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவாகியுள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ராயன் படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், வசூல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி, படம் வெளிவரும் இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில் இதுவரை ரூ. 2.1 கோடி வரை வசூல் செய்துள்ளது.