×

தனுஷின் "ராயன்"- ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..! சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

 

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.

<a href=https://youtube.com/embed/qQJJWhh-XRo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/qQJJWhh-XRo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
இந்நிலையில், ராயன் திரைப்படத்திற்கு 26ம் தேதி தேதி சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணிக்குள் 5 காட்சிகள் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.