விஜயகாந்த் நினைவிடத்தில் ராதா அஞ்சலி
Jan 11, 2024, 18:04 IST
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், நடிகை ராதாகவும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இவர்கள் இருவரும் அம்மன் கோவில் கிழக்காலே, மனக்கணக்கு ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.