"கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல்" - விஜய் சேதுபதியை புகழ்ந்த பிரபல இயக்குநர்!!

 
tn

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.  ஆரம்பகட்டத்தில் பல படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடித்து வந்த இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா ,சூது கவ்வும் ,சுந்தர பாண்டியன் ,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

tn

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் நிலையிலும் ரஜினி, கமல், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்து ரசிகர்களின் பார்வையை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் திருப்பினார்.  தற்போது விஜய் சேதுபதியின்  இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, மும்பைக்கர் பிசாசு2,  ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகவுள்ளன. 



இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி உடனான புகைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இன்று மாலை … ஆண்களில் ஷாரூக்கான் பெண்களில் Katrina Kaif இருவரையும் பிரமிக்க செய்து கொண்டிருப்power-ஐ சந்தித்தேன்.நேசிக்கும் கிளியும்,வாசிக்கும் பியானாவும்,யோசிக்கும் புதிய மார்க்கமாய் கண்டு ரசித்தேன் ரம்யமாய்!கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல். கடலாய் இருவருக்குமே. கடலாய் இருவருக்குமே அறிவின் அலை கரை நீள்கிறது.பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். நேசிக்கக் விரும்புகவர்களை நெருங்கக் கூடாதென்பார்கள்.நெருங்கியப் பின்னும்  அதிநேசம் கொள்பவராய் இருந்தார்.தித்திப்பின் சுவை நாவினில்.சந்திப்பின் தித்திப்பு அதை அசை போடுகையில்...என்று பதிவிட்டுள்ளார்.