☰
×

ஒரு அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய ராகவா லாரன்ஸ் -என்ன தெரியுமா ?

 

லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘மக்கள் சேவைக்கு வந்து 20 வருடங்களாகி விட்டது. டான்ஸ் மாஸ்டராக இருக்கும்போது, மற்றவர்களிடம் கேட்டு சில உதவிகள் செய்திருக்கிறேன். பிறகு ஹீரோவாக மாறிய பிறகு எனது சொந்த பணத்தில் உதவி செய்கிறேன். 20 வருடங்களாக மக்களுக்கும், சமூகத்துக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். ஆனால், நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தது. அது என் ஆசை இல்லை, ஒரு அம்மாவின் ஆசை. அதை இன்று முதல் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். டிராக்டர் கொடுப்பதற்காக ஒரு இடத்துக்கு சென்றிருந்தேன்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு அம்மா, உதவி கேட்டு ஒரு கடிதம் கொடுத்தார். அதில், எல்லா விசேஷங்களுக்கும் பட்டுப்புடவை அணிந்து செல்ல வேண்டும் என்பது என் ஆசை என்று குறிப்பிட்டு, தனக்கு ஒரு பட்டுப்புடவை கொடுக்க முடியுமா என்று கேட்டிருந்தார். உடனே என் அம்மா ஞாபகம் வந்தது. நான் முதன்முதலில் சம்பாதித்த பணத்தில், அம்மாவுக்கு ஒரு பட்டுப்புடவை வாங்கி கொடுத்தேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, நிறைய பெண்கள் அழுக்கு டிரஸ்சுடன் வருவதை பார்த்துள்ளேன். எனவே, 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள இந்நேரத்தில், லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக, எனது சொந்த பணத்தில் பட்டுப்புடவை திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளேன். வரும் 29ம் தேதி எனது பிறந்தநாளில் இதை தொடங்குகிறேன். முதலில் 5,000 பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.