×

‘விக்ரம்’ படத்தில் நடிக்க இருந்த ‘ராகவா லாரன்ஸ்’ -  என்ன கதாப்பாத்திரம்  தெரியுமா!

​​​​​​​

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டன திரைப்படம்  ‘விக்ரம்’.அதிரடி ஆக்சன் கலந்து இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சந்தனம் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்ட ஆனால் இந்த கதாப்பாத்திரத்திற்கு முதலில் நடிக்க தேர்வானது விஜய் சேதுபதி இல்லையாம். ராகவா லாரன்ஸ் தானாம், இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் மாஸ்டர். அதில் அவர் கூறியதாவது “விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி நடித்த கேரக்டரில் நடிக்க வேண்டியது நான்தான். ஆனால் நான் வேறே படங்களில் பிசியாக நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்சனையால் அது நடக்கவில்லை, ஆனால் தற்போது நல்வாய்ப்பாக தற்போது இந்த முறை புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி போடும் வாய்ப்பு கிட்டியுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்ந்து  ராகவா லாரன்ஸ் நடிப்பில் நேற்று வெளியான ருத்ரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.