×

‘சந்திரமுகி 2’ படத்தை முடித்த ராகவா லாரன்ஸ்..  கொண்டாட்டத்தில் படக்குழுவினர் !

 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 

கடந்த 2005-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 18 ஆண்டுகளுக்கு தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘சந்திரமுகி 2’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் ரஜினி ஸ்டைலில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். 

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், ஸ்ருதி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். 

இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.