×

ராகவா லாரன்ஸின் 25வது பட அப்டேட்  

 

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ராகவா லாரண்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு கதை எழுதிய லோகேஷ் கனகராஜ், பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய இரு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கவும் உள்ளார். அதேசமயம், அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட் மோகன் இயக்கும் ஹண்டர் படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.  சத்ய ஜோதி, கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையை திரைக்கு வரவுள்ளது. 

இந்த நிலையில் ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ ஸ்டூடியோஸ், நீலாத்ரி புரொடக்ஷன்ஸ், ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் ரமேஷ் வர்மா ‘கிலாடி’, ‘வீரா’உள்ளிட்ட சில ஹிட் படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.