×

‘சீனா கேங்குடா’.. மிரட்டலான ‘ரெஜினா’ வீடியோ பாடல் !

 

சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெஜினா’ படத்தின் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரபல மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெஜினா’. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த சுனைனா, இந்த படத்தில் கதாநாயகியை முன்னிறுத்தி நடிக்கும் படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் ரெஜினா கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் வைத்து இந்த படம் உருவாகிறது. 

இந்த படத்தில் மாறுப்பட்ட நடிப்பை சுனைனா வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. த்ரில்லர் டிராமா வகையை சேர்ந்த இந்த படதை எல்லோ பியர் புரொடக்‌ஷன் எல்எல்பி நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. சதீஷ் நாயர் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சீனா கேங்குடா’ என தொடங்கும் அந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/H6Qp7_iimU0?autoplay=1&mute=1&start=72><img src=https://img.youtube.com/vi/H6Qp7_iimU0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">