‘ரெய்டு’ படத்தின் ஸ்னீக் பீக்!
விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ள ‘ரெய்டு’ படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.
கன்னடத்தின் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘தகறு’ படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ள படம் ‘ரெய்டு’. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து ஸ்ரீ வித்யா, ஆனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் தீபாவளி ஸ்பெஷலாக நாளை வெளியாகவுள்ள இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ள ‘ரெய்டு’ படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.