×

“அண்ணாத்த அண்ணாத்த’’ முதல் வீடியோ பாடல் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு !

 

 ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் வீடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. அண்ணன்-தங்கை பாசத்தை வைத்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கடந்த தீபாவளியன்று வெளியான இப்படம் ஒரே வாரத்தில் 200 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது.  

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சூப்பர் ஸ்டாரின் மாஸ் இமேஜை வைத்து மட்டுமே இப்படம் தற்போது வரை திரையரங்கில் உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

டி இமான் இசையில் உருவாகியுள்ள அண்ணாத்த, சார காற்றே, மருதாணி, வா சாமி உள்ளிட்ட லிரிக்கல் பாடல்கள் திரைப்பட வெளியீட்டுக்கு முன்னரே வெளியானது. இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடலான ‘அண்ணாத்த அண்ணாத்த அதிரடி சரவெடி வீதியெங்கும் வீச’ என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. எஸ்.பி.பியின் காந்த குரலில் பாட, பாடலாசிரியர் விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.