×

முன்னாள் கேங்க்ஸ்டராக நடிக்கிறாரா  ரஜினி? -எந்த படத்தில் தெரியுமா ?

 
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ,இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது .மேலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது ,இந்த கூலி படத்தினை டப்பிங்கில் பார்த்த ரஜினி படம் குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்திருப்பதாக கூறினார் .இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், சத்யராஜ் உள்ளிட்ட பான் இந்திய நடிகர்களும் நடித்திருக்கின்றனர்.
கூலி திரைப்படத்தின் கதை பற்றி, இணையத்தில் ஒரு தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, ரஜினிகாந்த் ஒரு பெரிய முன்னாள்  கேங்க்ஸ்டர். இவர், ஒரு கட்டத்தில் தனது தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறார். அதற்கு முன்னர், தனது எதிரிகளை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார். இதிலிருந்து கதை சுழல்வதாக கூறப்படுகிறது. இத்தனை நாட்களாக படம் குறித்த தகவல்களை படக்குழுவினர் பொத்தி பொத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில், இப்படியொரு விஷயம் லீக் ஆகியிருப்பது படக்குழுவினர் மட்டுமன்றி ரசிகர்களையும் ஷாக் ஆக்கியிருக்கிறது.