×

3 அடி உயரம், 250 கிலோ எடை- ரஜினிகாந்துக்கு கருங்கல்லில் சிலைவடித்து ரசிகர் அபிஷேகம்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்தி, மதுரையில் அவருக்கு கருங்கல்லால் சிலை வடித்து அபிஷேகம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ, புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்தி, இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். தற்போது திருமண தகவல் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கார்த்தி தனது அலுவலகத்தில் ஒரு அறையை ரஜினிக்காக ஒதுக்கி அதில் அவர் நடித்த படங்களின் போஸ்டர்களையும், புகைப்படங்களையும் வைத்து வழிபட்டு வருகிறார். தற்போது அதற்கு ஒருபடி லேலே போய் பிரத்தியேகமாக வெட்டப்பட்ட கருங்கல்லில் ரஜினிக்கு 3 அடி உயரம், 250 கிலோ எடையில் சிலை வடித்து அதற்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்து, மலை அணிவித்து வழிபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.