×

கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரான ரஜினி -அவரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

 
நடிகர் ரஜினி இன்று ஒரு படத்தில் நடிக்க பல கோடிகள் சம்பளம் வாங்குகிறார் .இந்நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்த அவர் வாங்கிய முதல் சம்பளம் பற்றிய தகவல் வந்துள்ளது .அவர் கண்டக்டராக பணியாற்றிய போது மாதம் 750 ரூபாய் சம்பளம் வாங்கி இன்று பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார் .அவர் சினிமாவில் வாங்கிய முதல் சம்பளம் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம் 
ரஜினிகாந்த் திரைத்துறையில் தனது பயணத்தை 1975-ல் ஆரம்பித்து, இன்று 25 ஆண்டுகளுக்கும் மேல் நடிகராக செயல்படுகிறார். அவர் முதல் முக்கிய கதாபாத்திரம் வகித்த படம் ‘அபூர்வ ராகங்கள்’. அந்தப் படத்திற்கு அவர் பெற்ற சம்பள விவரம் சரியாக தெரியவில்லை. எனினும், 1978-ல் வெளிவந்த ‘பைரவி’ படத்தில் அவர் சம்பளமாக ரூ.50,000 பெற்றார். இதற்கு கூடவே அவர் ரூ.5,000 அட்வான்ஸ் தொகையாக பெற்றிருந்தார். 
இன்று ரஜினிகாந்த் தென்னிந்திய Super Star என்று அழைக்கப்படுகிறார். அவருடைய 50 வருட நடிப்பு வாழ்க்கையில் அவர் பெரும் புகழையும், ரூ.430 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் உருவாக்கியுள்ளார். சென்னையில் இருக்கும் அவரது வீடு ரூ.35 கோடி மதிப்புள்ளதாகும்.