×

ரத்த அழுத்த பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி…

ஒரு வழியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, தனது பிறந்தநாளை முடித்த கையோடு ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றார் ரஜினி. ஆனால் இரண்டாவது நாளே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு நெகடிவ் என ரிசல்ட் வந்தது. கொரோனா இல்லை என்ற போதிலும் ஹைதராபாத்தில் ரஜினி தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இன்று (டிசம்பர்
 

ஒரு வழியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, தனது பிறந்தநாளை முடித்த கையோடு ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றார் ரஜினி. ஆனால் இரண்டாவது நாளே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு நெகடிவ் என ரிசல்ட் வந்தது. கொரோனா இல்லை என்ற போதிலும் ஹைதராபாத்தில் ரஜினி தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 25) திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலைச் சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.

ரஜினி மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் வெளியானவுடன், பலரும் அவரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். மேலும், அப்பல்லோ மருத்துவமனைக்குப் பலர் நேரில் சென்றுள்ளனர். பலர் தங்களுடைய சமூக வலைதளத்தில் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.