☰
×

"ரஜினியின் வாழ்க்கை புத்தகத்தை ஒவ்வொரு சாஃப்டராக எழுதுகிறோம்"சவுந்தர்யா ரஜினிகாந்த்

 

திரைத்துறையில் 51 வருடங்களை கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் ரஜினிகாந்த், தற்போது தனது சுயசரிதையை எழுதி வருகிறார். இதுகுறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், ‘அப்பாவின் பயோகிராபியை படித்திருக்கிறேன். அதை எப்போது மக்கள் படிப்பார்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அது முதலில் வெளியாகி மக்களிடம் செல்லட்டும். அதற்கு பிறகு அதை படமாக்குவது பற்றி பேசலாம். ரஜினிகாந்த் பயோபிக்கில் ரஜினிகாந்தாக யார் நடிப்பார் என்பது குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது. அதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது.
தற்போது புத்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். அது முதலில் வெளியாகி வரவேற்பு பெற்ற பின்பு, திரைப்படமாக உருவாக்கலாம் என்று அனைவரும் முடிவு செய்தால், ரஜினிகாந்தாக யார் நடிக்கலாம் என்பது பற்றி பேசலாம். அப்பாவின் பயோகிராபியை ஒரு காவியமாக பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போல் நான் பார்க்கிறேன். காரணம், அவரது வாழ்க்கை பயணம் அவ்வளவு சிறப்பானது மற்றும் உதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. இன்னும் அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. 75 வருட பயணம் என்பது மிகப்பெரியது. அவர் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு வந்தது குறித்து எழுதியுள்ளோம். புத்தகத்தை ஒவ்வொரு சாஃப்டராக எழுதுகிறோம்’ என்றார்.