×

வெறித்தனமான ஆக்ஷனில் உருவாகும் 'ஜெயிலர்'... கசிந்தது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் !

 

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கசிந்துள்ளது.

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.

பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் பல மாநில நடிகர்கள்  நடித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், சிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு. வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடைசியாக கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்புடன் ரஜினியின் அனைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகைப்படங்கள் கசிந்துள்ள நிலையில் நிச்சயம் இந்த படம் மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.