×

மாஸாக வெளியாகவிருக்கும் ‘ஜெயிலர்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்.. எப்போது தெரியுமா ? 

 

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.  நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஒய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ‌இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.  இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜூலை மாதம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஜூன் முதல் வாரத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  ‌  ‌