×

அடம்பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

 

நடிகர் ரஜினிகாந்த் தனது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படப்பிடிப்பை முடித்துள்ளார். தற்போது, ரஜினி நடிப்பில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் கூலி படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.


இந்நிலையில், தனது பேரன் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்ததால் அவரை ரஜினியே அழைத்து சென்றுள்ளார்.    அப்போது பள்ளியில் ரஜினியை பார்த்த மாணவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்த புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.