×

கட்சி தொடங்கிய விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து

 

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். நீண்ட நாட்களாக சினிமாவில் இருக்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயங்கி வரும் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதேபோன்று கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல மன்ற நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றனர். அதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக நீண்ட நாட்களாக தகவல் கசிந்து வந்தது. இந்நிலையில் விஜய், தமிழக வெற்றி கழகம் என்று கட்சியை தொடங்கினார். இது தொடர்பான அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னாத  வெளியானது 

நடிகர் விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்தும், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.