×

'ஜெயிலர்' இசை வெளியீடு எப்போது ?... வெளியானது புதிய அப்டேட் 

 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஒய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். 

‌இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. முதலில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. அதன்பிறகு ஜூலை இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.  ‌  ‌