×

சூப்பர் ஸ்டார் சம்பவம் லோடிங்... 'ஜெயிலர்' சென்சார் தகவல் !

 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. 

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.‌ இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

 ‌இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமன்னாவின் 'காவாலா' பாடல் பட்டையை கிளப்பியுள்ள 'ஹூக்கும்' பாடல் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 28-ஆம் தேதி சென்னை நேரு உள்ளரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் 2.49 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது. அதேபோன்று முதல் பகுதி 1.19 நிமிடமும், இரண்டாம் பகுதி 1.30 நிமிடமும் உள்ளதாம். 'ஜெயிலர்' படத்திலிருந்து வெளியாகும் இந்த அப்டேட்டுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.