×

பிரம்மாண்டமாக நடைபெறும் ‘ஜெயிலர்’ இசை வெளியீடு.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

 

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. 

மிகவும் மாஸான ஸ்டைலான லுக்கில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘பீஸ்ட்’ படத்திற்கு நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்திலிருந்து வெளியான இரண்டும் பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்ததுதான். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிரூத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கத்தில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதில் பல மாநில நட்சத்திரங்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.