×

சூப்பர் ஸ்டாரின் சம்பவம் லோடிங்... ‘ஜெயிலர்’ செகண்ட் சிங்கிள் முக்கிய அப்டேட் 

 

 ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் இருந்து ‘காவாலா’ பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. தமன்னாவின் துள்ளலான நடனத்தில் மயங்கிய ரசிகர்கள், அதேபோன்று நடனமாடி இணையத்தில் வெளியீட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘காவாலா’ வையிஃப் அடங்குவதற்குள் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘ஜெயிலர்’ படத்திற்கான இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அனிரூத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.