அடிதூள்... 300 கோடி கிளப்பில் இணைந்த 'ஜெயிலர்'... கொண்டாடி மகிழும் ரசிகர்கள் !
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படத்தின் வசூல் 200 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் 96 கோடியும், இரண்டாவது நாளில் 56 கோடியும், மூன்றாவது நாளில் 69 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் உலக முழுவதும் 300 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.