×

'லால் சலாம்' ஷூட்டிங் முழுவதும் நிறைவு... சூப்பர் ஸ்டாருடன் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !

 

'லால் சலாம்' படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக ரஜினிகாந்த் நடித்துள்ளார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார். 

 

இந்த படத்தின் படப்பிடிப்பு செஞ்சி, திருவண்ணாமலை, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்தார். இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளதாக லைக்கா அறிவித்துள்ளது. இதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதால் முழு வீச்சில் தயாரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பணிகள் திட்டமிட்டபடி முடியும் பட்சத்தில் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.