'கலெக்ஷன் கிங்': திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்த பாலய்யாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
Sep 1, 2024, 15:50 IST
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பாலய்யா என அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார். தெலுங்கு திரையுலகில் இதுவரை 100 படங்களுக்கு மேல் பாலய்யா நடித்துள்ளார். சினிமா துறையில் 50 வருடங்களை நிறைவு செய்த பாலய்யாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ஆக்ஷன் கிங்! கலெக்ஷன் கிங்! டயலாக் டெலிவரி கிங்! என்னுடைய அன்புச் சகோதரர் பாலய்யா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.