4 நாட்களில் ரூ.404 கோடி வசூலித்த ''கூலி'’
நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸான 4 நாளில் உலகளவில் ரூ.404 கோடி வசூலைக் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை "சன் பிக்சர்ஸ்" நிறுவனம் தயாரித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த் உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்தது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ரிலீஸான 4 நாளில் உலகளவில் ரூ.404 கோடி வசூலைக் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் 4 நாட்களில் இந்தளவு வசூலை குவித்த முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும் ரிலீஸ் நாளில் அதிகபட்ச வசூலைக் குவித்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து அதிரடி காட்டியுள்ளது.