×

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்துடன் மோதும் ரஜினியின் 'கூலி'...? 

 

தமிழ் திரையுலகின் டிரெண்டிங் இயக்குநராக வலம் வருகிறார், லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து இரண்டு படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இவர், அடுத்த கைக்காேர்த்திருக்கும் பெரிய நடிகர், ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் 171வது படமான இதற்கு, சில மாதங்களுக்கு முன்னர் ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி, படப்பிடிப்பு நடைப்பெற்று முடிவதற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுவிடும். அந்த வகையில், கூலி படம் குறித்த அப்டேட்டும் திரை வட்டாரங்களில் கசிந்துள்ளது. இப்படம், வரும் 2025ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அஜித் நடிப்பில் அடுத்த வருடம் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு போட்டியாக ரஜினியின் கூலி படம் ரிலீஸாவதாக சிலர் இணையத்தில் கிளப்பிவிட்டு வருகின்றனர். 

அஜித் நடிப்பில் அடுத்த வருடம் விடாமுயற்சி-குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸாக, குட் பேட் அக்லி மே மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.