2 நாளில் ரிலீஸ், அதற்குள் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் வேட்டையன்...
Oct 8, 2024, 19:10 IST
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகப்போகும் திரைப்படம் வேட்டையன். ரஜினியை தாண்டி அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ராணா டக்குபதி, ரித்திகா சிங் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கூட அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்தது, அதில் ரஜினி பேசிய பேச்சு செம வைரலானது. ரூ. 160 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் போலீஸ் கதைக்களத்தை மையமாக கொண்டது. படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தற்போது படத்தின் ப்ரீ புக்கிங் மாஸ் கலெக்ஷன் செய்து வருகிறது. இதுவரை படத்தின் ப்ரீ புக்கிங் ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது