×

புத்தாண்டுக்கு தயாராகும் ‘ஜெயிலர்’... சூப்பர் ஸ்டார் படத்தின் மாஸ் அப்டேட் 

 

 ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினி பிறந்தநாளையொட்டி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். 

இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவ் ராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த பட்த்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினிக்காக தரமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்துடன் நிறைவுபெற்று விடும் என கூறப்படுகிறது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிந்துவிட்டால் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ‘ஜெயிலர்’ படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக ஜெட் வேகத்தில் நெல்சன் பணியாற்றி வருகிறது. இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது.