×

கார்த்திக் சுப்புராஜை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சூப்பர் ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தீபாவளி வெளியீடாக வந்த  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வசூல் வேட்டையாடி வின்னராக மாறியுள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு இது, வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை. சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத புதுமையான காட்சி. லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா? என்ர பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே சூர்யா இந்நாளில் திரை உலக நடிவேள்.

திருவோட கேமிரா விளையாடியிருக்கிறது. கலை இயக்குநரின் உழைப்பு பாராட்டிற்குரியது.வித்தியாசமாக இசையமைப்பதில் மன்னர் சந்தோஷ் நாராயணன். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள். யானைகளும் நடித்துள்ளது. படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைத்துள்ளார். I am proud of you கார்த்திக் சுப்புராஜ் my heartly congratulation to கார்த்திக் சுப்புராஜ் and team.” என பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.