×

தலைவர் 171: ரஜினிகாந்த்- லோகேஷ் கூட்டணி – இது எப்படி  இருக்கு…….

 

தலைவர் 171 படம் குறித்த அருமையான தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைவர் 170 படத்தை டி.ஜே ஞானவேல் ராஜா இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளனர். அதில் ரஜினிகாந்த முஸ்லீம் போலிஸ் காதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியான நிலையில் தற்போது தலைவர் 171 படம் குறித்த மாஸ் தகவல் வெளியாகி உள்ளதுஅதாவது இந்த படத்தை கோலிவுட் ரசிகர்களின் ஆஸ்தான இயக்குநரான லேகேஷ் கனகராஜ்தான் இயக்க உள்ளாராம், அனிரூத் இசையமைக்க இருக்கிறாராம். இப்படத்தை லோகேஷின் முந்தைய படங்களை இயக்கிய  தயாரிப்பாளர்களுள் ஒருவர் தயாரிக்கவுள்ளாராம்.

மேலும் , இந்த கூட்டணி குறித்த முதல் சுற்று சந்திப்பை ரஜினிகாந்தும் லோகேஷும் 'லியோ' படத்தின் அடுத்த சூட்டிங் ஷெட்யூலிற்கு முன்னதாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். லோகேஷ் இப்போது விஜய்யுடன் 'லியோ' படத்தை இயக்கியும், ரஜினி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்தும் வருகிறார்கள். தொடர்ந்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.