ரகசியமாக நடைபெற்ற போட்டோஷூட்... பட்டையை கிளப்பும் ரஜினி - லோகேஷ் கூட்டணியின் மாஸ் அப்டேட்
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான போட்டோஷூட் ரகசியமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் விரைவில் கலந்துக்கொள்ள உள்ளார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிப்பதால் அந்த படத்தை சில நாட்களில் முடித்துவிட்டு தனது 170வது படமான டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் ரஜினியின் 171வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக சமீபத்தில் சென்னையில் ரகசிய போட்டோஷூட் ஒன்றும் நடைபெற்றுள்ளது. இதனால் ‘தலைவர் 171’ படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.