☰
×

அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகும் ராக்கா -பட அப்டேட் 

 

அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறனின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராக்கா’. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். இத்திரைப்படம் சினிமா தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக இப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது.
இந்த உலக சாதனை கடந்த பிப்ரவரி 2026-ல் நிகழ்த்தப்பட்டது. ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் Motion Capture செய்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்ப சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கடந்த 15 செப்டம்பர் அன்று வழங்கப்பட்டது. கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லி ஆகியோரிடம் கின்னஸ் உலக சாதனையின் மூத்த நடுவர் ஸ்வப்னில் டாங்ரிகர் வழங்கினார்.