ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம்  ஓடிடியில் வெளியானது 

 
game changer

கேம் சேஞ்சர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. 

பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்திருந்த திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்தார். தமன் இதற்கு இசையமைத்திருந்தார். திருநாவுக்கரசு இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டார். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் ராம் சரண் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

<a href=https://youtube.com/embed/CXBLDC2WGbk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/CXBLDC2WGbk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

அவருடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வெளியான 15 நாட்களுக்குள் ஓடிடியில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் Einthustan என்ற தளத்தில் பணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளியாகி இருக்கிறது. அதேசமயம் இணையத்திலும் இந்த படத்தின் எச்டி பிரிண்ட் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.