ராம் சரண் நடித்துள்ள ‘Peddi’ படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிப்பு..!

 
peddi

ராம் சரண் நடித்துள்ள ‘Peddi’ படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தெலுங்கு சினிமாவின் முன்ணனி நடிகர்களில் ஒருவரான ராம் சரணின் 'RC16' படத்திற்கு ‘Peddi’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. வ்ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. ‘உபென்னா’ படத்தை இயக்கிய இயக்குநர் புச்சி பாபு ‘Peddi’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.  இந்நிலையில், ‘Peddi’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த கிளிம்ப்ஸ் நாளை நாளை 11.45 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.