'விஷ்வம்பரா' படத்தின் 'ராம ராம' பாடல் ரிலீஸ்...
Apr 13, 2025, 19:19 IST
சிரஞ்சீவி, த்ரிஷா நடித்துள்ள 'விஷ்வம்பரா' படத்தின் 'ராம ராம' பாடல் வெளியாகி உள்ளது.
வசிஷ்டா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், சிரஞ்சீவி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குத் திரைப்படம் 'விஷ்வம்பரா'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'ராம ராம' ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.பிரம்மாண்டப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் எண்ணற்ற நடனக் கலைஞர்களுடன் சிரஞ்சீவி ஆடும் லிரிக் வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.