"ராமராஜன் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற வதந்தி"-இப்படி கூறும் நடிகை யார்?
Feb 14, 2026, 06:00 IST
ராமராஜன், நளினி தம்பதி கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களது விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் ஒன்றுதான், ராமராஜன், அபிதா காதல். இருவரும் காதலிப்பதாலேயே நளினியை ராமராஜன் பிரிந்துவிட்டார் என்றும் பேசப்பட்டது. அப்போது இது பற்றி எதுவும் பேசாத அபிதா, 25 ஆண்டுகள் கழித்து இப்போது பேசியிருக்கிறார். அவர் கூறியது: அப்போது பரவிய இந்த தகவலால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். தினமும் அழுதபடி இருப்பேன்.
ராமராஜன் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றெல்லாம் வதந்தி கிளப்பினார்கள். அது உண்மையென்றால் அப்போதே நடந்திருக்க வேண்டுமே. அப்படி எதுவும் நடக்கவில்லை. காரணம், அது பொய்யான தகவல். எனது குடும்பத்தார் எனக்கு ஆதரவாக நின்றார்கள். அதனால்தான் அந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு வந்தேன். இவ்வாறு அபிதா கூறினார்.