ஹாலிவுட் தரத்திற்கு இணையான விஷூவல் "ராமாயணா" -பட விமர்சனம்
படத்தின் கதையை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அது பலரும் அறிந்ததுதான். பக்தியையும் மூலக்கதையின் உணர்வையும் சிதைக்காமல் நேர்த்தியாக திரையில் கொண்டு வந்துள்ள நிதேஷ் திவாரியின் இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நாம் இதுவரை கேட்ட ராமாயண கதையை விட சில புதிய விஷயங்களை சேர்த்துள்ளது கூடுதல் பலம். திரையில் ராவணனாக தோன்றும் யஷ் தனது மிரட்டலான நடிப்பால் கவர்கிறார்.
அவரது அறிமுக காட்சி மற்றும் எலிவேஷன்கள் சீன்கள் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். தனது அமைதியான, கனிவான மற்றும் அழுத்தமான நடிப்பால் ராமராக கவனம் பெறும் ரன்பீர் கபூர், அந்த வேடத்திற்கு தேவையான கண்ணியம், அமைதி, தெய்வீகத் தன்மை மற்றும் முகபாவனைகளை சிறப்பாகக் கொடுத்துள்ளார். சீதையாக வரும் சாய் பல்லவி அதற்கேற்ற நளினம், அன்பை நேர்த்தியாக கொடுத்துள்ளார். மற்ற துணை கேரக்டர்களின் நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
ஹாலிவுட் தரத்திற்கு இணையான விஷூவல் அனுபவத்தை தரும் பிரம்மாண்ட மேக்கிங். குறிப்பாக ஜடாயு காட்சி, ராவணனின் அறிமுக காட்சி, இரண்டாம் பாதியின் கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் கிரெடிட் காட்சி ஆகியவை இந்திய சினிமாவே பெருமைப்பட வேண்டிய விஷூவல்கள் என்றே சொல்லலாம்.