பிரம்மாண்டமாக தயாராகும் ராமாயணம் -ராமன்,சீதை யார் தெரியுமா?
புராண தொடர்களை இப்போது பல இயக்குனர்கள் படமாக்கி வருகின்றனர் .அதுவும் பிரமாண்டமான முறையில் தயாரித்து வெற்றி கண்டனர் .அந்த வகையில் பாகுபலி இரண்டு பாகமாக வந்து வெற்றி பெற்றது .அது போல் பொன்னியின் செல்வன் படமும் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகமாக வந்து வெற்றி கண்டது .அது போல் பக்தி படமாக ராமாயணம் இரண்டு பாகமாக எடுத்து வருகின்றனர் .இதை முதலில் இந்தியில் எடுத்து விட்டு பின்னர் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படலாம் .
இந்தியில் ‘போல்நாத் ரிட்டர்ன்ஸ்’, ‘தங்கல்’, ‘சிச்சோர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் நிதேஷ் திவாரி. இவர் தற்போது ராமாயணக் கதையைத் தழுவி திரைப்படமாக எடுத்துவருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகமான ‘ராமாயணம் பார்ட் 1’ 2026ம் ஆண்டு தீபாவளி அன்றும் இரண்டாம் பாகம் 2027 தீபாவளியன்றும் வெளியாகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமர் வேடத்திலும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். மேலும் சன்னி தியோல் அனுமன் வேடத்திலும் காஜல் அகர்வால் மண்டோதரியாக நடிக்கிறார்கள்.இரண்டு பாகங்களையும் எடுத்து முடிக்க சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவு ஆகும். இது இந்திய மதிப்பில் ரூ.4,000 கோடி என்று கூறுகிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா.