×

‘ராட்சசன்’ இயக்குனருடன் மீண்டும் கூட்டணி... விஷ்ணு விஷால் படத்தின் புதிய அப்டேட் !

 

‘ராட்சசன்’ இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

2018-ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்தார். விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது ராட்சசன். இந்தியாவின் மிகச்சிறந்த சைக்கோ த்ரில்லர் படமாக இப்படம் அமைந்தது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மீண்டும் நடிக்கவுள்ளார். விஷ்ணு விஷாலின் 21வது படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த படம் காதல், காமெடி கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகிறது. 

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா அருள் மோகன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால்சலாம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.