☰
×

ராம் சரண் நடிக்கும் புதிய படம் -இயக்குனர் யார் தெரியுமா ?

 

ராம் சரண், இயக்குனர் சுகுமார் மீண்டும் இணையும் பான் இந்தியா படத்துக்கு தற்காலிகமாக #RC17, #RC2Sukku என்று பெயரிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் பிரமாண்டமான இப்படத்தின் தொடக்க விழா பூஜை ஐதராபாத்தில் நடந்தது. சிரஞ்சீவி கிளாப் அடித்து, தில் ராஜூவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையை படக்குழுவினரிடம் வழங்கினார். பூஷன் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
விழாவில் பங்கேற்ற சில இயக்குனர்கள் இணைந்து முதல் காட்சியை இயக்கினார்கள். இதற்கு முன்பு ராம் சரண், சுகுமார் கூட்டணியில், ‘ரங்கஸ்தலம்’ என்ற படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது மீண்டும் அவர்கள் இணைந்துள்ளதால், இருதரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர், விஜய பிரசாத் பண்ட்ரெட்டி, பூஷன் குமார் இணைந்து தயாரிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி சுகுமார் இயக்குகிறார். இதில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திலும், கேரக்டரிலும் ராம் சரண் நடிக்கிறார்.