×

ராம் சரணின் ‘பெத்தி’ திரைப்படம் எவ்ளோ வசூல் செய்தது தெரியுமா ?

 

 இந்த ஆண்டின் முதல் பாதியில் பான்-இந்திய அளவிலும் பிராந்திய அளவிலும் பெரிய படங்களை களமிறக்கியது.மொத்த வருவாய் ரூ.1,185 கோடி வசூலித்து இந்திய அளவில் இந்த ஆண்டில் இரண்டாவது பெரிய சந்தையாக டோலிவுட் திகழ்கிறது. முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் மற்றும் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காரணமாக ஒட்டுமொத்த பட்ஜெட் செலவு தோராயமாக ரூ.1,000 கோடி முதல் ரூ.1,200 கோடி வரை இருந்தது.
ராம் சரணின் ‘பெத்தி’ திரைப்படம் ரூ.340 கோடி வசூலித்து முதலிடம் பிடித்தது, ஆந்திரா/தெலங்கானாவில் லாபம் தந்தாலும் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டவில்லை. சிரஞ்சீவியின் ‘மன சங்கர வரபிரசாத் காரு’ நல்ல வசூலைப் பெற்றது. ஆனால் பிரபாஸின் பிரம்மாண்ட பட்ஜெட் படமான ‘தி ராஜா சாப்’ ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.208 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.