☰
×

திரையுலகில் பாலியல் சுரண்டல் பற்றி ரம்யா கிருஷ்ணன் என்ன சொல்கிறார் தெரியுமா ?

 

திரையுலகில் பாலியல் சுரண்டல் ஆண், பெண் பேதமின்றி இன்றும் நடப்பதாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். சினிமா துறையில் பட வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல் நடப்பதாக நீண்ட காலமாக பல நடிகர்கள் வேதனையுடன் பேசி வருகின்றனர். இந்நிலையில் பாகுபலி பட புகழ் நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில்ல, ‘‘முன்னேறிய அமெரிக்காவிலேயே பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கிறது என்றால், இந்திய சினிமாவில் பாலியல் சுரண்டல் நடக்காது என சொல்ல முடியாது.

கட்டாயப்படுத்தியோ, சம்மதத்துடனோ அல்லது சாதாரணமாகவோ இந்த அத்துமீறல் ஆண், பெண் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் இன்றும் நடந்து வருகிறது. சினிமா கவர்ச்சியான துறை என்பதால் இது பெரிதாக பேசப்படுகிறது. வெளியிடங்களிலும் பல பெண்கள் இதை எதிர்கொள்கின்றனர். காலப்போக்கில் சம்மதம் தெரிவிக்கும் சுதந்திரம் மட்டுமே மாறியுள்ளதே தவிர, இந்த அவலத்தை யாராலும் மறுக்க முடியாது.
பழைய நடிகைகள் சந்தித்த சிரமங்களில் கால் பங்கை கூட இன்றைய நடிகர், நடிகைகள் அனுபவிக்காததால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.